உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 27வது கிளை திறப்பு விழா கோலாகலம்

பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 27வது கிளை திறப்பு விழா கோலாகலம்

'பூர்விகா அப்ளையன்ஸ்' நிறுவனத்தின் 27வது கிளை திறப்பு விழா கோலாகலம்நாமக்கல், ஜன. 2-நாமக்கல்லில், 'பூர்விகா அப்ளையன்சஸ்' நிறுவனத்தின், 27-வது கிளை, சேலம் மெயின் ரோடு, பாரதி மருத்துவமனை அருகே, பிரமாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர், ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர். பாரதி மருத்துவமனை டாக்டர் செந்தில்வேல் குத்துவிளக்கேற்றினார்.தொடர்ந்து, தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில், ''மொபைல் போன் என்றாலே, தமிழர்கள் மனதில் நெம்பர் 1 இடம் பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம் தான். 20 ஆண்டுகளாக, 475க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, 'பூர்விகா அப்ளையன்சஸ்' நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் பேசுகையில், ''பூர்விகா அப்ளையன்சஸ் தமிழகம் முழுவதும், 100 கிளைகள் திறக்க வேண்டும் என்ற வெற்றி வேக இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்,'' என்றார்.பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழாவையொட்டி, அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கும், சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய் கொடுத்து எளிய தவணையில், வீட்டு உபயோக பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். திறப்பு விழா சலுகையாக, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சவரன் தங்கம், ஸ்மார்ட் 'டிவி' வாங்கினால், இன்னொரு ஸ்மார்ட் 'டிவி' இலவசம், ரெப்ரிஜிரேட்டர் வாங்கினால், ஸ்மார்ட் 'டிவி' இலவசம். பழைய ஏசியை கொடுத்து, 10,000 ரூபாய் வரை எக்சேஞ்ச் போனஸ் பெறலாம். வீட்டு உபயோக பொருட்களுக்கும் மற்றும் சமையல் உபகரணங்களுக்கும், 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, 20,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியும் உண்டு.தவணை முறையில் வாங்கும் பொருட்களுக்கு ஒரு மாத தவணையும் இலவசம். 24 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் உண்டு. இதுபோன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்ட சலுகைகளும், பரிசுகளும், நேற்று துவங்கி, வரும், 19 வரை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ