உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடி மாத கடைசி வெள்ளி குண்டு மல்லி விலை உயர்வு

ஆடி மாத கடைசி வெள்ளி குண்டு மல்லி விலை உயர்வு

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், கோம்பை, பவித்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி பயிரிட்டுள்ளனர். கொல்லிமலை அடிவார பகுதியான இங்கு, குண்டுமல்லி அதிக வாசனையுடன் உள்ளதால், வெளி மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. இன்று ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால், நேற்று காலை எருமப்பட்டி பகுதியில் இருந்து, 3 டன் குண்டுமல்லி பூக்கள் நாமக்கல் பூ மார்க்கெட்டிற்கு ஏலத்திற்கு அனுப்பப்பட்டது. சேலம், ஈரோடு, கரூர் பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் 1 கிலோ மல்லிகை பூக்களை, 550 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை