ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
சேந்தமங்கலம்: 'பெஞ்சல்' புயலால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில், மூலிகை நிறைந்த சுற்றுலா தலமான கொல்லிமலையில் அதி கனமழை பெய்தது.இதனால், அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, கடந்த, 1 முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிகளுக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், அருவிக்கு செல்லும் பாதை பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை, டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளனர். அதில், காட்டாற்று வெள்ளம், மேக கூட்டத்தின் நடுவே இருந்து கொட்டுவது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தது.