வீட்டில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிபட்டது
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, கல்லாங்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனமாதவன் மனைவி சங்கீதா, 50. இவரது வீட்டில், நேற்று இரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. ராசிபுரம் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், வீரர்கள் அவரது வீட்டிற்கு சென்று, கழிவறையில் பதுங்கி இருந்த, நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். பின், ராசிபுரம் வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.