| ADDED : ஜூலை 16, 2024 01:41 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்-ளன. இவைகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் காவிரி நீர் வழங்கப்படுகிறது. இதனால், உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் தண்ணீர் வழங்க டவுன் பஞ்சாயத்து ஏற்-பாடு செய்துள்ளது.நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில் கும்பக்கொட்டாய் பகுதியில் உள்ள உள்ளூர் குடிநீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர்பந்தல்காடு பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஒரு குழாயில் இருந்து, நேற்று தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. 30 நிமிடம் தண்ணீர் வெளியேறியதால், சாலையோரம் வெள்ளம்போல் சென்றது. லைன் பைப்புகளை திறக்காமல் தண்ணீர் திறந்து விடுவதால் குறிப்பிட்ட பைப் மூலம் தண்ணீர் வெளியேறி வருவதாக இப்ப-குதி மக்கள் தெரிவித்தனர். எனவே, விரைவில் இதற்கான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.