கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த பெண்
நாமகிரிப்பேட்டை: கொல்லிமலை ஒன்றியத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 27; டிரைவர். இவரது மனைவி சினேகா, 24; இவர்களுக்கு திருமண-மாகி, ஆறு ஆண்டுகளாகிறது. 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள், தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே வசித்து வரு-கின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கப்பலுாத்துவை சேர்ந்-தவர் கந்தசாமி மகன் அஜித், 22; டிரைவர். இவர் காளப்பநாயக்-கன்பட்டி அருகே உள்ள புளியங்காடு பகுதியில் வசிக்கும் தன் சித்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அஜித்துக்கும், சினேகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் கடந்த, 2 மாதத்திற்கு முன் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். காளிமுத்து போலீசில் கொடுத்த புகார்படி, இருவரையும் அழைத்து பேசினர். சினேகாவை, காளிமுத்துவுடன் அனுப்பி வைத்தனர். காளிமுத்து, சினேகா மற்றும் குழந்தை மூன்று பேரும் முள்ளுக்குறிச்சியில் தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை, காளிமுத்து எழுந்து பார்த்தபோது, சினேகா தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இந்நிலையில், அஜித் மற்றும் சினேகா இருவரும் விஷம் குடித்துவிட்டு கப்பலுாத்தில் உள்ள அரளி பூ காட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். நேற்று காலை, பூ எடுக்க வந்த கந்தசாமி தன் மகன் மற்றும் சினேகா இருவரும் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருவரையும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.