மேலும் செய்திகள்
அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்
30-Dec-2024
பள்ளிப்பாளையம், ஜன. 2-பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் குண்டத்து ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, இரண்டு வாரத்திற்கு முன், பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா, நேற்று அதிகாலை துவங்கியது.கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். மேலும், பலர் கைக்குழந்தையுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
30-Dec-2024