உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பைரவநாதமூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவநாதமூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவநாதமூர்த்தி கோவிலில்தேய்பிறை அஷ்டமி வழிபாடுமல்லசமுத்திரம், நவ. 24-கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பைரவநாதமூர்த்தி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு யாகம், பூஜை நடந்தது.கடன் பிரச்னை, குடும்ப பிரச்னை தீர, பக்தர்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வழிபட்டனர். பலவகையான வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ