மேலும் செய்திகள்
எருமப்பட்டியில் கலைத்திருவிழா
29-Oct-2024
எருமப்பட்டி, நவ. 5-போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளி யில் உள்ள குடிநீர் தொட்டி, வகுப்பறை கதவுகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த, 15 ஆண்டுக்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவ, மாணவியரை மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த, 30 மதியம் முதல் அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து, 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு மாணவ, மாணவியர் வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டிக்கு செல்லும் பைப்புகள், சின்டெக்ஸ் டேங்க், கழிவறைக்கு செல்லும் குழாய்கள், வகுப்பறை கதவுகள், டேபிள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி போலீசார், பள்ளியில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
29-Oct-2024