உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தடுப்பணையில் நீர் இருப்பால் குடிநீருக்கு பற்றாக்குறை வராது

தடுப்பணையில் நீர் இருப்பால் குடிநீருக்கு பற்றாக்குறை வராது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. தடுப்பணையில், 10 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், நீர்தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைத்து மின் உற்பத்தி நடக்கும். அதேபோல நீர்தேக்கம் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பள்ளிப்பாளையம் நகரம், ஒன்றியம், ஆலாம்பாளையம், படவீடு, திருச்செங்கோடு என மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.கடந்த, ஐந்து மாதங்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஒடப்பள்ளி நீர்தேக்கம் பகுதியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகத்திற்கு போதுமானளவு தண்ணீர் நீர்தேக்கத்தில் உள்ளதால், வரும் கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !