உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோகனுார் அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மோகனுார் அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மோகனுார், மோகனுார் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. மோகனுார் ஒன்றிய முன்னாள் தலைவர் நவலடி தலைமை வகித்தார். சிலை அமைப்புக்குழு செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். டாக்டர் குழந்தைவேல், முன்னாள் மோகனுார் டவுன் பஞ்., தலைவர் உடையவர், துணைத்தலைவர் சரவணகுமார், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் முன்னாள் பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும்,எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பேசுகையில், ''திருக்குறள் உலகத்திற்கே பொதுமறையாக உள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை பராமரிப்புக்கு, என் எம்.பி., சம்பளத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். அவற்றை அறக்கட்டளை ஏற்படுத்தி, வங்கியில் டிபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டியில் இருந்து, ஆண்டுதோறும், பள்ளி மாணவியருக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும்,'' என்றார்.முன்னாள் காவல் உதவி ஆணையர் ராஜேந்திரராஜா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஜோதிடர் வீரமணி பாரதிதாசன், சிலை அமைப்புக்குழு தலைவர் விஸ்வநாதன், மோகநாதன், விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை