இந்த பூமி தேசியமும், தெய்வீகத்தையும் அடிப்-படையாக கொண்டது: பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேச்சு
நாமக்கல்: ''இந்த பூமி, தேசியமும், தெய்வீகத்தையும் அடிப்படையாக கொண்டது; தேவாரம், திருவா-சகம் உள்ளிட்ட இலக்கியங்களால் தமிழ் வளர்க்-கப்பட்டது,'' என, நாமக்கல்லில் பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசினார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பத-வியேற்கும் விழா, மாவட்ட கட்சி அலுவல-கத்தில், நேற்று நடந்தது. மாநில துணைத்த-லைவர் ராமலிங்கம், புதிய தலைவர் சரவண-னுக்கு பதவியேற்பு செய்து வைத்தார்.தொடர்ந்து, அவர் பேசியதாவது:பா.ஜ.,வில், 17 கோடியே, 85 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். நகர பொறுப்புகளில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பா.ஜ.,வில் உள்ளனர். மண்டல் எனப்படும் ஒன்-றிய, நகர அளவில் பெண்களுக்கு அதிகளவிலான பொறுப்புகளை வழங்கிய ஒரே கட்சி பா.ஜ., தான். 1967-ல் தி.மு.க., முதன் முதலில் ஆட்சி பொறுப்-புக்கு வர காரணமாக இருந்தவர் ராஜாஜி. சுதந்-திரா கட்சி கூட்டணி அமைத்து தான் ஆட்சி அமைத்தனர். பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தான், தி.மு.க., செயல்பட்டது. ஆனால், இன்று புதிதாக திராவிட கொள்கைகளை கூறி வருகின்-றனர்.கடந்த, 1967-ல், ஈ.வெ.ரா., 'தி.மு.க., ஆட்சி வரக்-கூடாது' எனக்கூறினார். இந்த பூமி தேசியமும், தெய்வீகத்தையும் அடிப்படையாக கொண்டது; தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இலக்கியங்-களால் தமிழ் வளர்க்கப்பட்டது. ஈ.வெ.ரா., அண்-ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு முன்னால் தமிழ் வளர்க்கப்பட்டது. கடல் விட்டு எரிந்து கொண்டிருக்கும் தேசியத்தையும், தெய்வீகத்-தையும், திராவிடம் என்ற போர்வை கொண்டு மறைக்க பார்க்கின்றனர். திராவிட போர்வை தான் எரிந்து போகும். நெருப்பு கனல் அணை-யாது. யாராலும் அணைக்கவும் முடியாது. முதல்வர் எடுத்துள்ள இது போன்ற ஆயுதங்கள், 2026 தேர்தலில் பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.