உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இறந்த வாக்காளர்களை இந்த அரசு நீக்குவது கிடையாது: தங்கமணி

இறந்த வாக்காளர்களை இந்த அரசு நீக்குவது கிடையாது: தங்கமணி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் தெற்கு யூனியன் மற்றும் ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி கலந்துகொண்டு பேசியதாவது: வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யாததால், 20 சதவீதம் வாக்காளர்கள் எங்கே இருக்கின்றனர் என, கண்டுபிடிக்க முடியவில்லை. இதை மாவட்ட கலெக்டர், அதிகாரியிடம் பலமுறை சொல்லி விட்டோம். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களை நீக்க வேண்டும் என, சொல்லியும் கூட, அதை சரியாக செய்யாமல் இருக்கின்றனர். ஒவ்வொரு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை வைத்து, யார் இருக்கிறார்கள், யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என, கணக்கெடுக்க வேண்டும்.அதேபோல் இறந்த வாக்காளர்களை, இந்த அரசு நீக்குவது கிடையாது. நாங்களும் பல முறை மாவட்ட கலெக்டரிடம் அந்த பட்டியலை கொடுத்து விட்டோம். ஆனால், நீக்காமல் மறுத்து வருகின்றனர். இன்னும், பத்து மாதத்தில் தேர்தலை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் சிங்காரவேலு, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சிவக்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை