உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்குவாரியில் காவலாளியை தாக்கிய மூன்று பேர் கைது

கல்குவாரியில் காவலாளியை தாக்கிய மூன்று பேர் கைது

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கல்குவாரி காவலாளியை தாக்கி விட்டு பீரோவில் இருந்த, ஏழு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.சேந்தமங்கலம் அருகே, அக்கியம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. கடந்த, 12 நள்ளிரவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், குவாரியில் இருந்த காவலாளியை தாக்கி விட்டு, அலுவலகத்தில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த, ஏழு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். சேந்தமங்கலம் போலீசார் நடத்திய விசாரனை யில், கல்குவாரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆசாத், 22, முகமது இஸ்லா, 30, முகமதுபுலா, 29, ஆகி‍யோர்‍ காவலாளியை தாக்கி விட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை