உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் கம்பியில் சாய்ந்த கிரேன் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

மின் கம்பியில் சாய்ந்த கிரேன் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

நாமக்கல்:நாமக்கல் தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் பணியின் போது கிரேன் சாய்ந்து உயரழுத்த மின்கம்பி மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நாமக்கல் - திருச்சி சாலை, நா கராஜபுரத்தில், ஸ்ரீதர்சன் என்ற புதிய தனியார் மருத்துவமனையில் மூன்று வாரங்களாக பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட் டியைச் சேர்ந்த தனபால், 60, இப்பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். நேற்று காலை, 7:30 மணிக் கு, பெயின்ட் அடிப்பதற்காக, எருமப்பட்டியைச் சேர்ந்த சுகுமார், 45, ஜோதி, 44, நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த முகேஷ்கண்ணன், 25, ஆகிய மூவரும் கிரேன் மூலம், 60 அடி உயரமுள்ள நான்காவது மாடிக்கு சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜீடே என்பவர் கிரேனை இயக்கினார். அப் போது, மேடான பகுதியில் நின்றிருந்த கிரேன் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் இ ருந்த உயரழுத்த மின்கம்பி மீது சாய்ந்ததில், கிரேன் தொட்டியில் இருந்த சுகுமார், ஜோதி, முகேஷ்கண்ணன் ஆகிய மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அலறி துடித்தனர். இதில், சுகுமார், ஜோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த முகேஷ்கண்ணனை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, முகேஷ்கண்ணன் உயிரிழந்தார். கிரேனின் ஹைட்ராலிக் அங்கு நிறுத்தியிருந்த கார் மீது விழுந்ததில், கார் நொறுங்கியது. மேலும், அருகில் இருந்த மின் கம்பமும் முறிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர் பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை