உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போராட்டத்திற்கு சென்ற மூவர் கைது

போராட்டத்திற்கு சென்ற மூவர் கைது

குமாரபாளையம்:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தயாராகி வந்தனர். இதில் பங்கேற்க, மாவட்ட அமைப்பாளரும், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினருமான முருகேசன் தலைமையில் பலர், நேற்று இரவு, பள்ளிப்பாளையம் சாலை, மேம்பாலம் பகுதியிலிருந்து புறப்பட தயாராக இருந்தனர்.ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்ய முயன்றனர். அப்போது, 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, கைது நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். போலீசார் சமரசம் பேசி, முருகேசன், 52, சங்க உறுப்பினர்கள் கனகராஜ், 44, ஆறுமுகம், 45, ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ