உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி ஆற்றில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி

ப.வேலுார்; நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், பிலிக்கல்பாளையம் அருகே நாகப்பாளையத்தை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ், 20; குமாரபாளையத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்தார். இவருடன் அதே கல்லுாரியில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார், 21, ஆந்திரா மாநிலம் நெல்லுாரை சேர்ந்த ஷேக் பைசூல் ரஹ்மான், 21, ஆகியோர் படித்தனர். மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் விடுமுறையால் நாகப்பாளையத்தில் உள்ள வினித் விமல்ராஜ் வீட்டுக்கு இருவரும் வந்தனர். மாலையில் மூவரும் அதே பகுதியில் காவிரி ஆற்றை சுற்றிப்பார்க்க சென்றனர்.இரவாகியும் திரும்பாததால், வினித் விமல்ராஜ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆற்றுக்கு சென்று பார்த்தனர். ஆற்றங்கரையோரத்தில் மூவரின் செருப்பு இருந்தது. தகவலறிந்த ஜேடர்பாளையம் போலீசார் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.வெகுநேரம் தேடியும் கிடைக்காத நிலையில், இரண்டாம் நாளாக நேற்று காலை மூன்று மாணவர்களின் சடலங்களும் ஆற்றில் மிதந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை