உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், கடந்தாண்டு செப்., 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று, காந்திபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வருடாந்திர விழா நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்று மாலை, 5:00 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.காந்திபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலை, அண்ணா நகர் பஸ் ஸ்டாப் வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி