உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம்ராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் நோய்கள் அதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.மேலும், துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, சேலம் சாலை, ஆத்துார் சாலை, புதிய பஸ் பஸ் ஸ்டாண்ட் வழியாக கோனேரிப்பட்டி வரை, இரண்டு கிலோ மீட்டர் துாரத்திற்கு நடந்து சென்றனர். தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ