குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண்
குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண்நாமக்கல், நவ. 5-'பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க, நாமக்கல் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண், 1800-599-7990 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள குறைகளை சரி செய்யவும், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் உள்ளதை சரி செய்யவும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களது குறைகளை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.