உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், கொல்லிமலைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். தற்போது, விட்டு விட்டு மழை பெய்து வருவதால், கொல்லிமலை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.விடுமுறை நாளான, நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. குளிர்ந்த சீதோஷ்ணத்தால், மலைப்பாதை முழுவதும் மேகமூட்டத்துடன், சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அறிய முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து, பனிப்பொழிவை, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி