உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதை டிரைவரால் போக்குவரத்து பாதிப்பு

போதை டிரைவரால் போக்குவரத்து பாதிப்பு

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்., சேலம்-நா-மக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடும்பத்தான் புதுார் பகு-தியில், நேற்று முன்தினம் இரவு, சேலம் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி, 'வேகனார்' கார் வந்துள்ளது. உடுப்பத்தான் புதுார் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனை தாண்டி, எதிர் திசையில் சென்று விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் காரில் இருந்தவர்களை மீட்டனர்.போலீசார் விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூர், கடுங்-கோடு, அளம்புலி அடுத்த பள்ளிமேபுரம் பகுதியை சேர்ந்த முக-மது மகன் முகமது ரபி, 30, என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்-தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்துக்குள்-ளான காரை பறிமுதல் செய்தனர். இந்த விபத்தால், சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, உடுப்பத்தான் புதுார் ரயில்வே மேம்பால பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ