மேலும் செய்திகள்
ஆறு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்
03-Jun-2025
எருமப்பட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு, வெளி முகமையின் கீழ் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை ஆண்டறிக்கை டு தணிக்கை செய்து அறிக்கை பெறுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்க விக்னேஷ் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில், குடிநீர் நிறுவனங்கள் முகமையின் கீழ் தணிக்கை செய்து ஆண்டறிக்கை எப்படி வழங்குவது என்பது குறித்து குடிநீர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
03-Jun-2025