இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மல்லசமுத்திரம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மல்லசமுத்திரம் வட்டார வள மையத்தில், 'இல்லம் தேடி' தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது. இதில், கற்றல் விளைவுகள், முன்னறித்தேர்வு, மாணவர்களுடைய அடைவு திறன், குழந்தைகளின் உளவியல், மாணவர்களுடைய கல்வித்திறன், பன்முகத்திறன்கள் ஆகிய தலைப்புகளில் பயிற் சியளிக்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி, ஆலோசனை வழங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சக்திவேல், பழனியம்மாள் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.