உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 28ல் மாவட்ட சிலம்ப போட்டி உடற்கல்வி ஆசிரியருக்கு பயிற்சி

28ல் மாவட்ட சிலம்ப போட்டி உடற்கல்வி ஆசிரியருக்கு பயிற்சி

28ல் மாவட்ட சிலம்ப போட்டிஉடற்கல்வி ஆசிரியருக்கு பயிற்சிநாமக்கல், நவ. 26-நாமக்கல் மாவட்ட அளவிலான பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், சிலம்ப போட்டி வரும், 28, 29 என, இரண்டு நாட்கள், சேந்தமங்கலத்தில் நடக்கிறது.போட்டியை சிறப்பாக நடத்த, நடுவர் களாக பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, சிலம்ப புத்தாக்க பயிற்சி முகாம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தலைமை வகித்தார். அப்போது, சிலம்ப போட்டிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். எந்த விதிமீறல்களுக்கும் இடம் அளிக்காமல் பணியாற்ற வேண்டும்.விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை