உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

நாமக்கல், தமிழகத்தில், 2026 ஏப்., அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கான பயிற்சி, நேற்று நாமக்கல் கவீன் கிஷோர் மண்டபத்தில் நடந்தது. நாமக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ.,வுமான சாந்தி தலைமை வகித்தார். அவர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்த பணிகளை மேற்கொள்வது குறித்த விளக்கங்களை எடுத்துக்கூறினார். தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதிப்படி, திருத்தப்பணிகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை