நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பஞ்சோலையில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பஞ்சோலை கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து பேசினார். விவசாயி ராஜா,' கரும்பு சாகுபடியில், அதிக மகசூல் பெறும் முறைகள் குறித்து' விளக்கமளித்தார். மேலும், கரும்பு சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்த போதுமான ஈரத்தன்மையை வழங்கவும் சருகு நிலப்போர்வை முறை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார், வேளாண்துறை திட்டங்கள் குறித்து பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் விக்னேஷ், ேஹமலதா ஆகியோர் செய்திருந்தனர்.