உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு

கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு

சேந்தமங்கலம்: கொல்லிமலை, மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு, நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் இரவு ஏராளமான சுற்றுலா பயணிகள் டூவீலர், கார்களில் காரவள்ளி வழியாக, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள சாலையில் சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 1:00 மணியளவில் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மூன்றாவது கொண்டை ஊசி வளைவில், 10 ஆண்டு பழமையான மரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர், சாலையின் குறுக்கே சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை