உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்டெர்லைட் ஆலையை திறக்க லாரி உரிமையாளர் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க லாரி உரிமையாளர் போராட்டம்

நாமக்கல்; இழந்த வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி, நாமக்கல்லில், லாரி உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள் கூறியதாவது:ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டதால், அதோடு இணைக்கப்பட்ட தொழில் துறைகள், தென் மாவட்டங்களில் மற்ற சார்பு தொழில்கள், லாரி, கனரக வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில லாரி ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தாலும், பல்வேறு தொடர் தொழில்கள் மூடப்படுவதாலும் ஏற்படும் நிதி நெருக்கடியால், வாழ முடியாமல் போராடி வருகின்றனர். எனவே, ஆலையை மீண்டும் அரசே ஏற்று, இயக்கி ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்து, ஆலையை திறக்க வேண்டும்.இதனால், லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை