மேலும் செய்திகள்
மழையால் மஞ்சள் வரத்து சரிவு
23-Jul-2025
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 11,542 ரூபாய், அதிகபட்சம், 14,616 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 10,022 ரூபாய், அதிகபட்சம், 13,002 ரூபாய்; பனங்காலி, 7,229 ரூபாயிலிருந்து, 29,399 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 402, உருண்டை, 159, பனங்காலி, 20 என, 581 மூட்டை மஞ்சள், 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
23-Jul-2025