உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.5.49 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

ரூ.5.49 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த மஞ்சள் ஏலத்திற்கு ஜேடர்பாளையம், பரமத்தி, வெங்கடாசலபுரம், கருமாபுரம், ஒடசல்பட்டி, துறையூர் பகுதிகளில் இருந்து, 649 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.இதில் விரலி மஞ்சள் குவிண்டால், 7,599 முதல் 13,933 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 8,855 முதல் 12,200 ரூபாய் வரையிலும், பனங்காலி மஞ்சள் 7,569 முதல் 27,699 ரூபாய் வரையிலும் என, 649 மூட்டைகள், 5.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ