மேலும் செய்திகள்
சாலையோர மரங்களை வெட்டியது குறித்து விசாரணை
19-Aug-2025
பள்ளிப்பாளையம்: வீடு வாடகைக்கு எடுத்து போதை மாத்திரை விற்பனை செய்த, இரண்டு பேரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் அடுத்த ஆசிரியர் காலனி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும், இந்த மாத்திரை வாங்குவதற்காக இரவு, பகலாக பலர் வந்து செல்வதாக, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர். நேற்று மாலை, அப்பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த வெடியரசம்பாளையம் பூலக்காட்டூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், 25, சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், 28, ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 192 போதை மாத்திரை, ஒரு டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், போதை மாத்திரை விற்பனை செய்வதற்காக ஆசிரியர் காலனி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆன்லைனில் ஒரு மாத்திரையை, 40 ரூபாய்க்கு வாங்கி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். போதை மாத்திரை வாங்கி செல்வோர், தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துகின்றனர். புதிதாக யாராவது வந்து இவர்களிடம் மாத்திரை கேட்டால் தராமல், தெரிந்தவர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே மாத்திரை கொடுத்து வந்துள்ளனர். இதில், சந்திரசேகரன் மீது ஏற்கனவே ஒரு போதை மாத்திரை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
19-Aug-2025