நிலத்தகராறில் இருவர் கைது
நாமகிரிப்பேட்டை: நமகிரிபேட்டை ஒன்றியம், பிலிப்பாக்குட்டையை அடுத்த கண-வாய்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கிருஷ்ணசாமி, 60; இவரது மகன் பரத், 25; இவரது பக்கத்து காட்டை சேர்ந்-தவர் ரங்கசாமி மகன் ரவி, 48; இவரது மனைவி சத்தியப்பிரியா, 43; இவர்களது மகன் கவுதம், 21; இரு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவ-ரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் தனியாக வந்த கிருஷ்ணசா-மியை, ரவி, சத்தியப்பிரியா, கவுதம் ஆகியோர் தாக்கியுள்ளனர். அதேபோல், கிருஷ்ணசாமி மற்றும் பரத் இருவரும் சத்தியப்பிரியா உள்ளிட்ட இருவரையும் தாக்கியுள்ளனர்.இதுகுறித்து இரு தரப்பினரும் ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகார்படி, ரவி, கவுதமை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி, பரத்தை தேடி வருகின்-றனர்.