மேலும் செய்திகள்
சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
25-Aug-2025
நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த அணிமூர் பகுதியில் சாராயம் விற்பதாக, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் சோதனை நடத்திய போலீசார், 8.5 லிட்டர் சாராயம், 60 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அணிமூரை சேர்ந்த சுப்பிரமணி, 43, சின்னப்பன்காடு பகுதியை சேர்ந்த தங்கவேல், 72, ஆகிய, இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு (மதுவிலக்கு) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, கலெக்டர் துர்காமூர்த்தி, கைதான சுப்பிரமணி, தங்கவேல் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை, மதுவிலக்கு போலீசார் அவர்களிடம் வழங்கினர்.
25-Aug-2025