மேலும் செய்திகள்
'இன்டர்வியூ'க்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி
20-Mar-2025
குமாரபாளையம்: குமாரபாளையம், ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் ரவி, 60; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 52. இருவரும், நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு, பவானி கூடுதுறை கோவிலுக்கு, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பழைய காவிரி பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த, 'பல்சர்' டூவீலர், மொபட் மீது மோதியது.இதில், மூவரும் பலத்த காயமைடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், அவர் மூவரையும் மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்து ஏற்படுத்திய, 'பல்சர்' டூவீலர் ஓட்டி வந்த பவானியை சேர்ந்த பிரதீப், 29, என்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
20-Mar-2025