உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் திருடியவர் கைது

டூவீலர் திருடியவர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் - ஆத்துார் பிரதான சாலையில், தாசில்தார் அலுவ-லகம் எதிரே தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, சிங்களாந்-தபுரத்தை சேர்ந்த தனபால் மனைவி கவிதா, 45, பணியாற்றி வரு-கிறார். இவர், தினமும் டூவீலரில் வேலைக்கு சென்று வருவாார். கடந்த, 17ல் டூவீலரில் கவிதா வேலைக்கு சென்றார். மாலை, மீண்டும் வீட்டிற்கு செல்ல டூவீலரை பார்த்தபோது காண-வில்லை.இதுகுறித்து, ராசிபுரம் போலீசில் புகாரளித்தார். அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, மருத்துவமனைக்கு வந்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், டூவீலரை திருடிச் சென்றது தெரிந்தது. இதையடுத்த, 'சிசிடிவி' வீடியோவை வைத்து திருடனை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில், சேந்தமங்கலம் திருமணபட்டி, சேனையன் காட்டை சேர்ந்த முத்து மகன் குமரேசன், 54, டூவீலரை திருடிச் சென்றது தெரிந்-தது. இதையடுத்து ராசிபுரம் போலீசார் குமரேசனை கைது செய்-தனர்.ரூ.68 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்திருச்செங்கோடு, செப். 29-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி மஞ்சள் குவிண்டால், 12,260 முதல் 16,013 ரூபாயும்; கிழங்கு மஞ்சள், 11,584 முதல், 14,790 ரூபாயும்; பனங்காலி மஞ்சள், 13,309 முதல், 17,069 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 848 மூட்டை மஞ்சள், 68 லட்சம் ரூபாய்க்கு விற்ப-னையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ