டூவீலர் திருடியவர் கைது
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஹான்பக்ஸ், 36; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் டூவீ-லரை கந்தம்பாளையம் கடை வீதியில் உள்ள டீக்கடை முன் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஹான்பக்ஸ், அங்கு ஒரு கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை சோதனை செய்தார். அதில், முதியவர் ஒருவர், டூவீலரை தள்ளிக்கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தேடிய போது கொண்டரசம்பாளையம் கிராமத்தில், காணாமல் போன டூவீல-ருடன் நின்று கொண்டிருந்த, திடுமல் ஆவாரம் காட்டை சேர்ந்த கருப்பண்ணன், 62, என்பவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்-தனர். கந்தம்பாளையம் போலீசார், கருப்பண்ணனை கைது செய்-தனர்.