மேலும் செய்திகள்
ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
10-Oct-2024
பள்ளிப்பாளையம், அக். 23-பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த மொளசி பகுதியில் உள்ள பாழியில், கடந்த, 20ல் பெண் சடலம் மிதப்பதாக, மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் சடலத்தை மீட்டனர். விசாரணையில், இறந்த பெண்ணுக்கு, 40 வயதிருக்கும். இவரது இடது கையில், 'சிவா' என பச்சை குத்தப்பட்டுள்ளது. சுருட்டை முடியுடன் காணப்படுகிறார். இறந்த பெண் யார்? எந்த ஊர்? போன்ற விபரங்கள் தெரியவில்லை. மொளசி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
10-Oct-2024