மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
நாமக்கல்: 'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைசிறந்த மருத்துவராக வர-வேண்டும்' என, 'நீட்' இலவச பயிற்சி மைய துவக்க விழாவில், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மத்திய இணை அமைச்சர் முருகன் வாழ்த்து தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி மையம், நாமக்கல்-மோ-கனுார் சாலையில் உள்ள ராமவிலாஸ் கார்டனில் நிறுவப்பட்டு, நேற்று துவக்க விழா நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சரவணன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். நிறுவன மேனேஜிங் டிரஸ்டி சக்திவேல், அறங்காவலர் காந்தி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய தகவல் -ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், டில்லியில் இருந்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாவது: ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும், எந்த தடங்களுமின்றி, 'நீட்' தேர்வை எழுத வேண்டும்; நன்கு பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இலவச, 'நீட்' பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இளைய சமுதா-யத்தை முன்னேற்ற, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்-படுத்தி வருகிறது. இந்த பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்தி, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, தலைசிறந்த மருத்துவராக வர-வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
11-Mar-2025