உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு

மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு

நாமக்கல், புதுப்பாளையம் மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன், தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.நாமக்கல் மாவட்டம், மோகனுார், குட்லாம்பாறை அடுத்த கே.புதுப்பாளையத்தில், பயிடிகுத்தலவாருக்கு பாத்தியப்பட்ட மதுரை வீரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:15 மணிக்கு, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதையடுத்து, மதுரை வீரன் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பா.ஜ., மாநில துணை தலைவர் ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ