உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை

நாமக்கல், 'வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, ஆக., 1 முதல், மூன்று நாட்களுக்கு, கொல்லிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு சார்பில், கொல்லிமலையில் ஆக., 1 மற்றும் 2 என, இரண்டு நாட்கள் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கொல்லிமலை பகுதியில் செயல்பட்டு வரும், அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை, ஆக., 1 முதல், 3 வரை, மூன்று நாட்கள் மூடிவைக்க வேண்டும்.கொல்லிமலை பகுதியில் செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் தாலுகா காரவள்ளி ஆகிய, நான்கு டாஸ்மாக் மதுபான கடைகளையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் வகையில், ஆக., 1 முதல், 3ம் தேதி வரை முழுமையாக மூடவேண்டும். இந்த நாட்களில் கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ