உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குப்பைக்கு தீ வைப்பால் மூச்சுவிட சிரமம் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

குப்பைக்கு தீ வைப்பால் மூச்சுவிட சிரமம் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

நாமக்கல்:'குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால், புகை மூட்டத்தில் கிராம மக்கள் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், கிராம மக்கள் நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மணியங்காளிப்பட்டி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்., மணியங்காளிப்பட்டியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், மோகனுார் டவுன் பஞ்., இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகிறது. இங்கு, குப்பையை கொட்டி அவற்றை தரம் பிரித்து இயற்கை உரம் தயார் செய்து முறையாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, குப்பை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.அதனால், ஏற்படும் புகை மூட்டம், சுற்றியுள்ள, ஒரு கி.மீ., துாரத்திற்கு பரவுகிறது. அதன் காரணமாக, அருகில் உள்ள கிராம மக்கள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால், மூக்கை பிடித்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குப்பை கிடங்கிற்கு கேட் இல்லாமல் திறந்தவெளியில் இருப்பதால், தெருநாய்கள் குப்பையில் உள்ள அழுகிய இறைச்சிகளை தின்று, வெறிபிடித்து அருகில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. அதன் காரணமாக, ஆறு ஆடுகள் இறந்துள்ளன.இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றனர். மேலும், அசட்டையாக பதில் அளிக்கின்றனர். கிராம மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை