உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எருமப்பட்டியில் வார்டு சபா கூட்டம்

எருமப்பட்டியில் வார்டு சபா கூட்டம்

எருமப்பட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்., பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் வகையில், மூன்று நாட்களுக்கு வார்டு சபா கூட்டம் நடத்தப்பட உள்ளது. ‍இதேபோல், நேற்று, 1 முதல், 6 வரை உள்ள வார்டுகளுக்கான வார்டு சபா கூட்டம், பிள்ளையார்‍கோயில் தெரு, முருகன் திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவி, செயல் அலுவலர் யவணாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் சாக்கடை, குடிநீர், ‍தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு குறைகள் கேக்கப்பட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !