பஸ்சில் பட்டாசு வெடித்த மாணவர்களுக்கு எச்சரிக்கை
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் இருந்து தினமும் காலை, 8:00 மணிக்கு, 'வி1' என்ற அரசு டவுன் பஸ் ப.வேலுார் வழியாக கபிலர்மலை செல்கிறது. நேற்று இந்த பஸ்சை டிரைவர் மாணிக்கம், 50, இயக்கினார். கண்டக்டராக ராஜசேகரன், 40, இருந்தார். நேற்று காலை, மாணவர்கள் சிலர் பஸ்சுக்குள் பட்டாசு கொளுத்தியதால் பயணியர் அதிர்ச்சியடைந்தனர். இதில், டென்ஷனான மாணிக்கம், பஸ்சை ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி சென்று புகாரளித்தார். போலீசார் தகவலின்படி, போலீஸ் ஸ்டே ஷனுக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை கண்டித்தனர். அதன் பின், போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.