உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புளியங்காடு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்

புளியங்காடு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்

சேந்தமங்கலம், கடந்த சில நாட்களாக, கொல்லிமலை மற்றும் சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராக உள்ளது. கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் வரும் தண்ணீரானது, அடர்ந்த வனப்பகுதியில் பயணம் செய்து அடிவார பகுதியை அடைகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரவள்ளி அடுத்துள்ள புளியங்காடு ஆற்றில் தற்போது தண்ணீர் அளவு கூடிக்கொண்டே வகிறது. இதனால் சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை