மேலும் செய்திகள்
வெயிலால் வறண்டமல்லசமுத்திரம் சின்ன ஏரி
03-Apr-2025
சாலை விபத்தில் ஏட்டு பலி
24-Apr-2025
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு தினமும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், மாணவர்கள் வருகின்றனர். இவர்கள் திருச்செங்கோடு, ராசிபுரம், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிறுத்தத்தில் இதுவரை தண்ணீர் தொட்டி வைக்கவில்லை. பஸ்சுக்காக மக்கள் நீண்டநேரம், வெயிலில் நிற்கும்போது தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மயக்க நிலைக்குகூட செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தற்சமயம், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பஸ் நிறுத்தத்தில் தண்ணீர்தொட்டி வைக்க வேண்டும்.
03-Apr-2025
24-Apr-2025