உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு

அரசு மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு

நாமக்கல், நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவியருக்கான அறிமுகப்பயிற்சி திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. முதல் நாளில் கல்லுாரிக்கு வந்த மாணவியருக்கு, ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ராமலிங்கம் பேசினார்.கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசுகையில், ''இக்கல்லுாரி, 1969ல் தொடங்கப்பட்டு, இன்று வரை பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது. இக்கல்லுாரியின் முன்னாள் மாணவியர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். நீங்களும் நன்றாக படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ