உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவி

நாமக்கல், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 32 பயனாளிகளுக்கு, 15.62 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 390 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ மூலம், 11 பேருக்கு, 50 சதவீதம் மானியத்தில், 11 லட்சம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், சேமிப்பு கிடங்கு அமைக்க, 50 சதவீதம் மானியத்தில், 2.50 லட்சம் ரூபாய்.சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மூன்று பேருக்கு, இயற்கை மற்றும் விபத்து மரண உதவி தொகை, 1.42 லட்சம் ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 11 பேருக்கு, 70,860 ரூபாய் மதிப்பில், சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என, 32 பேருக்கு, மொத்தம், 15.62 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.வாழ்த்து பெற்ற மாணவியர்பீஹார் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு கால்பந்து போட்டியில், அரசு பள்ளியில் பயிலும், நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவியர், ஐந்து பேர், நவோதயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் என, ஆறு பேர் கலந்து கொண்ட தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற மாணவியர், கலெக்டர் உமாவிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை