ரூ.4.34 கோடியில் நலத்திட்டம்
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, ''நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 128 மாற்றுத்திறனாளிகளுக்கு, 30 லட்சத்து, 91,862 ரூபாய், தொழிலாளர் நலத்துறை சார்பில், 150 பயனாளிகளுக்கு, 3 கோடியே, 82 லட்சத்து, 50,800 ரூபாய், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 72 பேருக்கு, 20 லட்சத்து, 88,576 ரூபாய் என, மொத்தம், 350 பேருக்கு, 4.34 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது,'' என்றார்.