உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

ராசிபுரம், ராசிபுரம்-நாமக்கல் சாலையில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதில், பூசாரி முன் வரிசையாக பக்தர்கள் நின்று சாட்டையடி வாங்கி சென்றனர். தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.இதேபோல், ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 21ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல், உருளுதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையால், 3 அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை